மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தமிழ் சர்ச்சை : விமான நிலையம் விளக்கம்!

தமிழ் சர்ச்சை : விமான நிலையம் விளக்கம்!

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் மற்றும் இந்தி அறிவிப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று விமான நிலையம் விளக்கமளித்துள்ளது.

முதலில் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் தமிழ் மொழி அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழை அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இன்று (பிப்ரவரி 8) காலைச் சென்னை விமான நிலைய அறிவிப்புப் பலகையில் தமிழ் மொழி நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. விமானங்கள் வருகை, புறப்பாடு பற்றிய அறிவிப்புப் பலகையில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் அறிவிக்கப்படும்.

ஆனால் காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளில் அறிவிப்பு போடுவதன் மூலம் தாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே காலை நேரங்களில் தமிழ், இந்தி நீக்கப்படுவதாக தகவல் பரவியது.

இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலைய ட்விட்டர் பக்கத்தில் வெளியான விளக்கத்தில், தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கான படங்களோடு,தமிழ் அறிவிப்பு நிறுத்தப்படவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளது.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018