மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

பாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்!

பாலிவுட் நடிகர் மீது பாலியல் புகார்!

பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜிதேந்திரா மீது அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

ஹிமாச்சல பிரதேச டி.ஜி.பி-யிடம் நேற்று (பிப்ரவரி 7) அந்த பெண் அளித்துள்ள புகாரில், “1971ஆம் ஆண்டு ஜனவரி மாதம், எனக்கு 18 வயதிருக்கும் போது, 28 வயதான ஜிதேந்திரா சிம்லாவில் படப்பிடிப்புகாக வந்தபோது மதுபோதையில் பாலியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தினார். எனது பெற்றோர் உயிரோடிருக்கும்போது இந்த புகாரை அளித்திருந்தால் அவர்கள் மனமுடைந்து போயிருப்பார்கள் என்பதால் இப்போது புகார் அளித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

75 வயதான ஜிதேந்திரா சுமார் 200 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பல படங்களையும், சீரியல்களையும் தயாரித்துவருகிறார். பாலிவுட்டில் பிரபலமான அவர் மீது எழுந்துள்ள இந்த புகார், பாலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 8 பிப் 2018