மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

விவாகரத்து: தமிழகம் 12 ஆவது இடம்!

விவாகரத்து: தமிழகம் 12 ஆவது இடம்!

இந்தியாவில் விவாகரத்து அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 12ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று மத்திய சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.

இந்தியாவிலேயே மிக பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அதிக விவாகரத்துகள் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3 சதவிகித மக்களை மட்டும் கொண்ட கேரளா விவாகரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் 61,970 விவாகரத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.

கேரளாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட மகாராஷ்டிரா, பிகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில்தான் இருக்கின்றன.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி நாடு முழுவதும் மொத்தம் 7,13,511 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகச் சட்டத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதில் 2,64,409 வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. அதாவது மொத்தமுள்ள வழக்குகளில் 38 சதவிகிதம் உ.பி.யில் மட்டும் பதிவாகியுள்ளது.

பிகாரில் 46,735 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 35,349 வழக்குகளும் தமிழகத்தில் 21,672 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. 2013-14 ஆண்டுகளில் தமிழகத்தில் அதிக அளவு விவாகரத்து வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும், அவை தற்போது குறைந்துள்ளதாகவும், விவாகரத்து அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 12ஆவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018