மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

எம்ஜிஆர் நூற்றாண்டு: 7தமிழர்களை விடுதலை செய்க!

எம்ஜிஆர் நூற்றாண்டு: 7தமிழர்களை விடுதலை செய்க!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்டகாலம் சிறையிலிருக்கும் 7தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7பேர் கடந்த 26 வருடங்களுக்கு மேலாகச் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 7 பேரையும் விடுவிக்கக் கோரி தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலுமுள்ள தமிழர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டை முன்னிட்டு 7பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று (பிப்ரவரி 8) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் பத்தாண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாமல் 27 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ். பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையையும், சாத்தியக்கூறுகளும் உறுதி செய்யப்படவில்லை என்ற போதிலும் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பம்" என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018