மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்கள் சிறைவைப்பு!

தனியார் மருத்துவமனையில் செய்தியாளர்கள் சிறைவைப்பு!

சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெற வந்த நோயாளியிடம் சிகிச்சை அளித்தற்காக அதிகத் தொகையைக் கேட்டு மிரட்டியதாக ஸ்ரீகோகுலம் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து விசாரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் சிறைவைக்கப்பட்டதையடுத்துப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் 5 சாலை பகுதியில் ஸ்ரீகோகுலம் மருத்துவமனை என்னும் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் கடந்த 5ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதிக் கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் கன்னம் மற்றும் தோள்பட்டை என உடலில் பல இடங்களில் சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. லட்சுமணன் ஸ்ரீகோகுலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே இரண்டு நாட்களாக லட்சுமணனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. லட்சுமணனின் உறவினர்கள் சிகிச்சைக்கான தொகையை அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் செலுத்திவந்தனர்.

நேற்று (பிப்ரவரி 8) லட்சுமணனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்த உறவினர்களிடம், பிரிண்ட் செய்யப்படாத மேலும் 8 ஆயிரம் ரூபாய்க்கான பில் வழங்கப்பட்டது.

இந்தப் பில்லைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வெறும் சிராய்ப்பு காயங்களுக்கான சிகிச்சைக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளீர்கள் என மருத்துவமனை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு மருத்துவமனை நிர்வாகிகள் லட்சுமணனின் உறவினர்களை மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக லட்சுமணனின் உறவினர்கள் செய்தியாளர்களுக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் செய்தியாளர்கள் அம்மருத்துவமனைக்குச் சென்று, செய்தி சேகரித்துக்கொண்டிருக்கும்போது, அங்குவந்த மருத்துவமனை நிர்வாகிகள் சிலர் செய்தியாளர்களை இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்திற்குள் பூட்டிச் சிறைவைத்தனர்.

தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் செய்தியாளர்களை விடுவித்தனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 8 பிப் 2018