மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்க சுய மரியாதை தேவை!

தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்க சுய மரியாதை தேவை!

தமிழ் திரையுலகில் பிரச்சினைகள் ஏற்படும் இடங்களில் சம்மன் இல்லாமல் ஆஜராகும் வாராகி இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் சிவா மனசுல புஷ்பா

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா இருவருக்கும் டெல்லி விமான நிலையத்தில் மோதல் ஏற்பட்டது. பொது இடத்தில் சிவா கன்னத்தில் புஷ்பா அறைந்தது கண்டு அரசியல் வட்டாரம் அதிர்ந்தது.

அந்தச் சம்பவத்தின் பாதிப்பில் கற்பனை கலந்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் சிவா மனசுல புஷ்பா, அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பதை படமாக எடுத்திருக்கிறேன் என்கிறார் இயக்குநர் வாராகி.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (7.2.2018) மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய திரைப்பட துறை முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தமிழ் சினிமா அழிந்து வருகிறது; காப்பற்ற வேண்டும் என சோக கீதம் பாடினார்கள்.

மூத்த இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியபோது, “தமிழ் சினிமா ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சுயமாக முடிவெடுப்பவர்களாக மாறினால் படங்கள் நஷ்டத்தை சந்திக்காது. ஹீரோவின் வியாபார கணக்குக்கு உட்பட்டு சம்பளம் பேசுகிற துணிச்சல் தயாரிப்பாளர்களிடம் இங்கு கிடையாது. ஹீரோ கால்ஷீட் கிடைத்தால் போதும் அதற்காக நாயகன் சொல்வதை எல்லாம் தயாரிப்பாளர்கள் சுயமரியாதையை விட்டுக் கொடுத்து கேட்கிறார்கள். நாயகனுக்கு தகுதிக்கு மீறிய சம்பளம் கொடுப்பதால் பட்ஜெட் எகிறி ரீலீசின் போது நஷ்டத்தை சந்திக்கின்றனர்” என்று கூறினார்

மேலும் அவர், இந்த நிலை மாறினால் தமிழ் சினிமா லாபகரமான தொழிலாக இருக்கும் என்றார்.

“அப்படிப்பட்ட போக்கு இங்கு சிலரிடம் இருப்பதால் தான் வாராகி போன்றவர்கள் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மூன்று தளங்களிலும் ஒரே நேரத்தில் இயங்க முடிகிறது. அதன் விளைச்சல் தான் சிவா மனசுல புஷ்பா திரைப்படம் என பாராட்டினார் சந்திரசேகர். “இந்த விழாவில் நூறு மூத்த கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டு நிதி உதவியும் வழங்கப்படுவது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நிகழ்வு” என்றார்.

“தமிழ் திரையுலகில் கோடிகளில் சம்பளம் வாங்குபவர்கள்கூட இப்படிச் செய்யாதபோது முன்மாதிரியாக அதனைச் செய்த ஜே.கே.ரித்திஷ் இது போன்ற நல்ல விஷயங்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்டுக்கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018