மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தும் பூஜா

தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தும் பூஜா

மகேஷ் பாபுவின் 25ஆவது படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கும் பூஜா ஹெக்டே, அடுத்ததாக பிரபாஸ் படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்துவருகிறார். அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த துவ்வடா ஜெகன்னாதம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இதனால் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் அவர் அங்கு முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

ஸ்பைடர் படத்தைத் தொடர்ந்து கொரட்டலா சிவா இயக்கத்தில் 'பாரத் அனே நேனு' படத்தில் நடித்திருக்கிறார் மகேஷ் பாபு. இதனையடுத்து அவரது 25ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்திற்கு பூஜா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் தற்போது `பாகுபலி’ நாயகன் பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு பூஜா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

சாஹோ படத்தை அடுத்து ராதா கிருஷ்ணகுமார் இயக்கவுள்ள புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். ‘கோபிகிருஷ்ணா மூவீஸ்’ நிறுவனம் சார்பில் கிருஷ்ணம் ராஜு தயாரிக்கவுள்ளார். இதன் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலமாக பிரபாஸுடன் ஜோடி சேரும் பூஜா ஹெக்டேவுக்கு அவருடன் இணையும் முதல் படம் இதுவாகும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018