மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

பிஎட் : நுழைவுத்தேர்வு முறை ரத்து!

பிஎட் : நுழைவுத்தேர்வு முறை ரத்து!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஎட் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வியில் பிஎட் படிப்பை வழங்கி வருகிறது. இதில் தமிழ் வழி படிப்புக்கு 500 இடங்களும், ஆங்கில வழி படிப்புக்கு 500 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைநிலை ஆசிரியர் பயிற்சியுடன் பட்டப் படிப்பு முடித்துவிட்டு, அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவோர் இந்த படிப்பில் சேரலாம். கடந்த ஆண்டு வரை பிஎட் படிப்புக்கு நுழைவுத்தேர்வு மூலமாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக பட்டப் படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதுகலை பட்டம் பெற்றிருந்தால் கூடுதலாக 3 மதிப்பெண்களும், எம்பில் பட்டதாரியாக இருந்தால் 5 மதிப்பெண்களும், பிஎச்டி முடித்திருந்தால் 6 மதிப்பெண்களும் வழங்கப்படும். பிஎட் படிப்பில் சேர பிப்ரவரி 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018