மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

வாட்ஸப் வடிவேலு

வாட்ஸப் வடிவேலு

குளித்துவிட்டு, அந்த குளியலறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாமல் அழுக்குத் துணிகளை அந்த அறையிலேயே அசிங்கமாகவும் அழுக்காகவும் வைத்திருந்தால், அது ஜாதகத்தில் உள்ள சந்திரனின் நிலையை பலவீனப்படுத்தி, தொழில் மற்றும் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நடக்கும்போது தரையைத் தேய்த்தவாறு நடக்கும் பழக்கம் இருந்தால், அப்பழக்கத்தை உடனே மாற்றுங்கள். ஏனெனில், இப்படி தரையைத் தேய்த்துக் கொண்டே நடப்பது என்பது உங்கள் விதியைச் சுற்றி அழுக்கைக் கொண்டுவருவதைக் குறிக்கும். இப்பழக்கம் ராகு வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதைக் குறிக்கிறது.

உணவு உண்ட பின், சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்யாமல், அப்படியே எழுவார்கள். இப்பழக்கம் வாழ்வில் நிலையான வெற்றியை அடைய பெரும் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருப்பதைக் குறிக்கிறது. எனவே, சாப்பிட்ட பிறகு அவ்விடத்தை சுத்தம் செய்யுங்கள். இதனால் சனி மற்றும் சந்திர தோஷத்தில் இருந்து விடுபடலாம்.

நாள் முழுவதும் வெளியே சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்ததும், கை கால், முகத்தைக் கழுவாமல் இருந்தால், அது வாழும் வீட்டுக்குள் எதிர்மறை ஆற்றலை கொண்டு வருவதற்குச் சமம். மேலும், இந்தச் செயலால் மன அழுத்தம்தான் அதிகரிக்கும். ஆகவே வீட்டில் நிம்மதியாக இருக்க நினைத்தால், கை கால், முகத்தைக் கழுவுங்கள்

தினமும் வீட்டில் உள்ள பூஜை அறையை சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதைவிட்டு தெய்வ சிலைகள் மற்றும் பூஜை அறை அசுத்தமாக இருந்தால், அது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தி கல்வி, செல்வம், குடும்ப வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு முதலில் குளிர்ந்த நீரைக் கொடுக்கும் பழக்கத்தைக் கொள்வதன்மூலம், விருந்தினர்களின் உடல் வெப்பத்தைத் தணிக்கும். மேலும், இப்பழக்கத்தால், விருந்தினர்களைச் சுற்றியுள்ள ஆற்றலால் வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்கும். மேலும் இப்பழக்கத்தால் ஜாதகத்தில் உள்ள ராகு மற்றும் கால சர்ப தோஷத்தைப் போக்கும்.

காலணிகளை முறையாக அடுக்கி வைக்காமல் சிதற விட்டிருந்தால் அது வாழ்வில் எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான தவற்றை இனிமேல் செய்யாதீர்கள்.

இதுதான் எனக்கு முதலில் வந்த மெசேஜ். அடுத்த மூன்று மணி நேரத்தில், அதை அப்படியே முன்னாலும் பின்னாலும் வார்த்தை ஜாலங்கள் போட்டு, அறிவியலும் ஆன்மிகமும்னு ஒரு குரூப், நபிகள் சொன்ன மந்திரம், சாய்பாபா வாசகங்கள், விவேகானந்தர் வாழ்க்கை முறையில் சில, நீலகிரிமலை பாட்டி குறிப்புகள் அப்படின்னு ஏகபோக விஷயங்களை இணைச்சுச் சொல்றாங்க.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018