மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

நடிகை திவ்யா மீது பாஜக புகார்!

நடிகை திவ்யா மீது பாஜக புகார்!

போலி சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்க வேண்டுமென்று காங்கிரஸ் தொண்டர்களிடம் கூறியதாக, நடிகை திவ்யா ஸ்பந்தனா மீது பெங்களூரு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர் அம்மாநில பாஜகவினர்.

கன்னட திரையுலகைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா என்ற ரம்யா. குத்து, வாரணம் ஆயிரம் உட்பட சில தமிழ் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியான இவர், தற்போது அக்கட்சியின் சமூக ஊடகம் மற்றும் தகவல்தொடர்பு பிரிவு தலைவராக இருந்து வருகிறார். நேற்று (பிப்ரவரி 7) பெங்களூரு காவல்துறையில், இவர் மீது அம்மாநில பாஜக சமூக ஊடகப் பிரிவு புகார் அளித்துள்ளது.

”சமீபத்தில், காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே திவ்யா பேசுவதுபோல ஒரு வீடியோ வெளியானது. அதில், தொண்டர்கள் போலி சமூக வலைதள கணக்குகளை உருவாக்க வேண்டுமென்று அவர் பேசுகிறார். ஒரு தொண்டரின் சந்தேகத்திற்கு பதிலளிக்கும்போது, போலி சமூக வலைதளப் பக்கங்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்கிறார். இதன்மூலமாக, அவர்களைத் தவறு செய்யத் தூண்டுகிறார். இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று தனது புகாரில் தெரிவித்துள்ளது பாஜக.

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகை ரம்யா, தான் அவ்வாறு எதுவும் பேசவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்த பிரச்சனை குறித்துப் பதிலளித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப்பிரிவு, வீடியோவில் இடம்பெற்ற நடிகை ரம்யாவின் பேச்சு திரித்து மாற்றப்பட்டுள்ளாகத் தெரிவித்துள்ளது. போலி சமூக வலைதளக் கணக்குகளை ஊக்குவிப்பது போல, ரம்யாவின் பேச்சை பாஜகவினர் எடிட் செய்து, வைரலாகப் பரப்பிவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018