மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

இந்திய வீராங்கனைகள் சாதனை!

இந்திய வீராங்கனைகள் சாதனை!

இந்திய, தென்னாப்ரிக்க மகளிர் அணிகளுக்கிடையே நேற்று (பிப்ரவரி 7) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அதில் கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுத் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 302 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 135 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதன் பின்னர் 303 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள் இந்திய அணியின் பந்து வீச்சினைத் தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறி விக்கெட்டுகளை இழந்தனர். 124 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடக்க வீராங்கனையாகக் களமிறங்கிய லிசல்லே லீ மட்டும் 73 ரன்களைச் சேர்த்து இறுதி வரை போராடி ஆட்டமிழந்தார்.

இந்திய அணி சார்பில் பூனம் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ராஜேஸ்வரி கெயக்வாட், தீப்தி ஷர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜுலன் கோஸ்வாமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். கோஸ்வாமி இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 166 ஒருநாள் போட்டிகளில் விளையாடி கோஸ்வாமி இந்தச் சாதனயை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய வீராங்கனை கேட்ரின் ஃபிட்ஸ்ஸ்பாட்ரிக் 180 விக்கெட்டுகளை வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு இந்தச் சாதனையை முறியடித்த கோஸ்வாமி தற்போது 200 விக்கெட்டுகளை வீழ்த்திப் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனா சதம் அடித்ததன் மூலம் தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாகச் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என மூன்று வெளிநாட்டு ஆடுகளங்களிலும் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018