கொப்பரைத் தேங்காய்: ஆதரவு விலை உயர்வு!

தேங்காய் உற்பத்தி மற்றும் அதன் மூலமான தயாரிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதன்கிழமை (பிப்ரவரி 7) மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'நடுத்தர தரத்திலான கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் ஒன்றுக்கு 6,785 ரூபாயிலிருந்து 7,750 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஆலைகளுக்கான கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலையும் 6,500 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படுவதன் மூலம் தேங்காய் விவசாயம் மேற்கொள்ள விவசாயிகளின் முதலீடு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'