மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

மீண்டும் உண்ணாவிரதம்: ஜீயர் அறிவிப்பு!

மீண்டும் உண்ணாவிரதம்: ஜீயர் அறிவிப்பு!

ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்துள்ளார்.

தினமணி நாளிதழ் சார்பாக கடந்த மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசினார். அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு இந்துத்துவ அமைப்பினர் அவருக்கெதிராகப் போராட்டம் நடத்தினர். குறிப்பாக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார். அறிவித்தபடியே கடந்த மாதம் ஜனவரி 17ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஜீயர் பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க இரண்டாம் நாளே போராட்டத்தை முடித்துக்கொண்டார். பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வைரமுத்துவுக்கு விடுத்த கெடு கடந்த 3ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில், ‘உண்ணாவிரதம் இருப்பது பற்றி ஆண்டாள் தாயாரின் குழந்தைகளான அனைத்து பக்தர்களிடமும் கேட்டு முடிவெடுக்கப்படும்’ என்று ஜீயர் கூறியிருந்தார். மேலும், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது அலுவலகத்துக்கே சென்று நேரில் சந்தித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், தனது போராட்டத்துக்கு ஆதரவளித்த காரணத்துக்காக விஜயகாந்த்துக்கு நன்றி தெரிவித்து, ஆசி வழங்கினார்.

இதுவரை கவிஞர் வைரமுத்துவை மன்னிப்பு கேட்காத நிலையில், அவரைக் கண்டித்து இன்று (பிப்ரவரி 8) முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் நேற்று மாலை அறிவித்துள்ளார். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 8 பிப் 2018