மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தமிழகத்தில் கூகுள் மையம்!

தமிழகத்தில் கூகுள் மையம்!

சென்னையில் விரைவில் கூகுள் மையம் அமைக்க வேண்டுமென, அந்நிறுவனத்திடம் கோரியிருப்பதாகத் தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், கூகுள் நிறுவனத்தின் இந்திய தலைமை இயக்குநர் சேத்தன் கிருஷ்ணசாமி, நேற்று (பிப்ரவரி 7) தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டனைச் சந்தித்துப் பேசினார். அதன்பின், இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் விரைவில் கூகுள் மையம் அமைக்க கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவித்தார் அமைச்சர் மணிகண்டன்.

“டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களைப் போன்று, தமிழகத்திலும் விரைவில் கூகுள் மையம் அமைக்க கோரியிருக்கிறோம். அதேபோல, இயற்கைப் பேரிடர் காலத்தில் சென்னையில் இணையத் தொடர்பு பாதிக்காமல் இருக்க 20 கிலோமீட்டர் தூரத்துக்கு இணைய சேவை வழங்கும் கூகுள் பலூன் வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளோம். பெரு நாட்டிலுள்ள கூகுள் பலூனைச் சென்னைக்குக் கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறினார். விரைவில் அமெரிக்கா சென்று கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையைச் சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார் மணிகண்டன்.

மதுரை, தர்மபுரி, சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் கிராமப்புறப் பெண்களுக்குக் கணினி பயிற்சி அளிக்கவும், அவர்களுக்கான இணையதள சேவையை அதிகரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018