மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

அன்பெனும் மழையில் நனைந்தேன்!

அன்பெனும் மழையில் நனைந்தேன்!

‘அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார் இசைஞானி இளையராஜா.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் எண்பதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டன.

இதில் நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

இதையடுத்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சிவகுமார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இவர்களின் வாழ்த்துக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து இன்று வரை என்னை நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் மனப்பூர்வமாகவும் வாழ்த்து தெரிவித்த உலகெங்கிலும் பரவியிருக்கும் இசை ரசிகர்கள், அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர், தொழில் துறையினர், மீடியா அன்பர்கள் அனைவருக்கும் நன்றி. விருது அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை நூற்றுக்கணக்கானவர்கள் தினமும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வாழ்த்தும், உங்களின் அன்பும் எனக்கு மேன்மேலும் உத்வேகத்தைத் தந்துள்ளது. என்னை நெகிழ வைத்துள்ளது. ஆண்டவனின் அருளாலும், உங்கள் அன்பாலும் மக்களுக்காக என் பணியை செவ்வனே செய்து கொண்டிருப்பேன். அன்பெனும் மழையில் நனைய வைத்த உங்கள் அனைவருக்கும் மீண்டும் மனப்பூர்வமான நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018