மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டம் அறிவிப்பு!

மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் போராட்டம் அறிவிப்பு!

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 16ஆம் தேதி, மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக மின்வாரிய ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வும், நிலுவைத் தொகையும் இதுவரை வழங்கப்படாத நிலை உள்ளது. இதையடுத்து, மின்வாரியத் தொழிற்சங்கங்கள் கடந்த 23ஆம் தேதியன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. வேலைநிறுத்த அறிவிப்பு வெளியானதும் உடனடி நடவடிக்கையாகக் கடந்த மாதம் 22ஆம் தேதி அன்று தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் மின்வாரிய உயர் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது வரும் 12ஆம் தேதி ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் காணப்படும் என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது அரசின் சார்பில் உறுதியளிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

வியாழன் 8 பிப் 2018