மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

தமிழ் இருக்கை: நிதியை வழங்கினார் ஸ்டாலின்

தமிழ் இருக்கை: நிதியை வழங்கினார் ஸ்டாலின்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதியை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 7) வழங்கினார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய வேண்டுமானால், 39 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதில், 10 கோடி ரூபாயைத் தமிழக அரசு சில மாதங்களுக்கு முன்பு வழங்கியது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தங்களால் ஆன நிதியை வழங்கி வருகின்றனர். தமிழ் ஆர்வலர்கள் மூலம் ரூ.82 லட்சம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மொத்தம் ரூ.36 கோடி திரட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்ததுடன் மற்ற கட்சிகளும் நிதியளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், தமிழ் இருக்கைக்காக திமுக சார்பில் ரூ 1 கோடிக்கான காசோலையை அதற்காக அமைக்கப்பட்ட குழு உறுப்பினர் ஆறுமுக முருகையாவிடன் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

வியாழன் 8 பிப் 2018