மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

‘டே ஜீரோ’வைத் தள்ளிப்போட்ட விவசாயிகள்!

‘டே ஜீரோ’வைத் தள்ளிப்போட்ட விவசாயிகள்!

கேப் டவுனில், டே ஜீரோ ஏப்ரல் மாதம் வரவிருந்த நிலையில் விவசாயிகள் அளித்த தண்ணீர் தானத்தால் ஏப்ரல் மாதத்துக்குத் தள்ளி போடப்பட்டுள்ளது.

(டே ஜீரோ – தண்ணீர் முற்றிலுமாக வறண்டு போகும் நாள்)

தென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுனில் சுமார் 4 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக இந்த ஆண்டு பெய்ய வேண்டிய மழை அளவு மிகவும் குறைந்துள்ளது. இதனால், கேப் டவுனில், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியுள்ளது.

உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல், முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குத் தள்ளப்படும் என்று ஆய்வாளர்களால் கணக்கிடப்பட்டுள்ளது. அந்நாளை டே ஜீரோ என்று கூறுகிறார்கள்.

இதனால் அங்குள்ள மக்களுக்கு நாளொன்றுக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படுகிறது. தோட்டங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திருடுபவர்களைக் கண்காணிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சத்தால் அங்கு போராட்டமே வெடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே அப்பகுதி மக்களின் நிலையை கருத்தில்கொண்டு கிரோன் லாண்ட் நீர்ப்பாசன சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் மில்லியன் லிட்டர் தண்ணீரை கேப் டவுனுக்குத் திறந்துவிட்டுள்ளனர்.

இதனால் ஏப்ரல் மாதம் வரவிருந்த டே ஜீரோ, மே மாதத்துக்குத் தள்ளிப்போடப்பட்டுள்ளதாக அந்நகர நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் திறந்துவிடும் தண்ணீர் சுமார் 20 நாள்களுக்குள் அந்நகருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018