மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

நியூட்ரினோ: ஓ.பி.எஸ்ஸுக்குப் பூவுலக நண்பர்கள் கண்டனம்!

நியூட்ரினோ: ஓ.பி.எஸ்ஸுக்குப் பூவுலக நண்பர்கள் கண்டனம்!

நியூட்ரினோ திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள துணைமுதல்வர் பன்னீர்செல்வத்துக்குப் பூவுலக நண்பர்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று (பிப்ரவரி 7) விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்தால் பொதுமக்களுக்கோ, வன விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படாது என துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிகிறோம்

இந்தத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையானது தகுதியற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தனது நிலைப்பாட்டை, தண்ணீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசு குறித்த ஆய்வு மேற்கொள்ள மட்டுமே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் நிபுணர்கள் உள்ளனர். நியூட்ரினோவுக்குப் பல்வேறு துறை வல்லுநர்களின் கருத்து பெறப்பட வேண்டியிருப்பதால் அத்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அக்குழு அளிக்கும் முடிவின் அடிப்படையிலேயே இத்திட்டத்துக்கான அனுமதி வழங்க முடியும் எனத் தீர்ப்பாயம் கூறியிருந்தது. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்பது இத்திட்டத்துக்கு எதிரானதாகவே இருந்தது.

தற்போதுவரை இத்திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படாத நிலையில் எந்த ஆதாரங்களை வைத்து தமிழக துணை முதல்வர் மேற்கண்ட தனது கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பதை விளக்க வேண்டும்.

இந்தத் திட்டமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 4.9 கி.மீ தூரத்தில்தான் உள்ளது என்பதை துணைமுதல்வர் அறிவாரா?

இத்திட்டத்துக்குத் தேசிய வனவிலங்குகள் நல வாரியத்தின் அனுமதி அவசியம் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்ததை துணைமுதல்வர் அறிவாரா?

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வியாழன் 8 பிப் 2018