மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

கிச்சன் கீர்த்தனா: முருங்கைப்பூ - முட்டை பொரியல்!

கிச்சன் கீர்த்தனா: முருங்கைப்பூ - முட்டை பொரியல்!

அதிகளவு சத்துகள் உள்ள முருங்கைப்பூவில் இன்று முருங்கைப்பூவுடன் முட்டை சேர்த்து பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

முருங்கைப்பூ - 2 கைப்பிடி அளவு

சீரகம் - கால் தேக்கரண்டி

முட்டை - ஒன்று

கறிவேப்பிலை - 5

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 5 பல்

பச்சை மிளகாய் - 2

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் முருங்கைப்பூவில் உள்ள காம்பை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அலசி வைக்க வேண்டும்.

பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் பொரியவிட்டு, பூண்டுச் சேர்த்து வதக்க வேண்டும்.

பூண்டு லேசாக வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் முருங்கைப்பூவைச் சேர்த்து வதக்கவும்.

அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்க வேண்டும்.

இப்போது முருங்கைப்பூ வெந்து, சிறிது தண்ணீருடன் இருக்கும்போதே முருங்கைப்பூவைப் பரவலாக்கிவிட்டு முட்டையை உடைத்து ஊற்ற வேண்டும்

நன்றாக கிளறிவிட்டு முட்டை வெந்து உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும்.

சுவையான முருங்கைப்பூ - முட்டை பொரியல் தயார்.

கீர்த்தனா தத்துவம்:

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 8 பிப் 2018