மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

சண்டைக் காட்சிகளை விரும்பும் சன்னி லியோன்

சண்டைக் காட்சிகளை விரும்பும் சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று (பிப்ரவரி 7) சென்னையில் தொடங்கியது.

பாலிவுட் படங்களில் நடித்துவந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழில் நாயகியாக அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் வீரமாதேவி.

தம்பி வெட்டோத்தி சுந்தரம், சௌகார்பேட்டை உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனம் சார்பில் தன்னுடைய முதல் படமாக பொன்ஸ் ஸ்டீஃபன் தயாரிக்கிறார். தென்னிந்திய கலாசாரங்களை மையமாகக்கொண்டு மிகுந்த பொருட்செலவில் சரித்திரப் படமாக உருவாகும் இந்தப் படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் தந்துள்ள சன்னி லியோன் கத்திச்சண்டை, குதிரையேற்றம் மற்றும் சண்டைக் கலைகளை மும்பையில் கற்றுவருகிறார். இந்த நிலையில், இதன் படப்படிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் சன்னி லியோன், வி.சி.வடிவுடையோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அம்பரீஷ் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் வில்லனாக நவ்தீப் நடிக்க, நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படம் குறித்து சன்னி லியோன் ஃபர்ஸ்ட் ஸ்பார்ட் இணையதள பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், “எனக்கு சண்டைக் காட்சிகள் எப்போதும் பிடிக்கும். நீண்ட நாள்களாக இதுபோன்ற ஸ்கிரிப்ட்டுக்காகத்தான் காத்திருந்தேன். தென்னிந்தியா எனக்கு எப்போதும் ஸ்பெஷல். இங்குதான் எனக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளாவில் எனக்கு ரசிகர்கள் அதிகம். இந்தப் படத்தில் என் கதாபாத்திரம் மிகவும் வலுவாக உள்ளது. அதனால் மன உறுதியுடன் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

வியாழன் 8 பிப் 2018