மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

பியூட்டி ப்ரியா: பேனும் பொடுகும்...

பியூட்டி ப்ரியா: பேனும் பொடுகும்...

‘பேனும் பொடுகும் போன இடம் தெரியவில்லை’ என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிகவும் பொலிவான கூந்தலோடு வலம்வர வேண்டுமா... இதோ சில பயனுள்ள டிப்ஸ்...

‘பிடிரோஸ்போரம் ஓவல்’ என்ற நுண்ணுயிர் கிருமியால் பொடுகு ஏற்படுகிறது. இது அதிகமாக பரவி தலையில் அதிக அளவு பொடுகை உற்பத்தி செய்கிறது. இதனால் தலையில் அரிப்பு ஏற்பட்டு முடி உதிர்தல் அதிகரிக்கிறது. எனவே சாலிசிலிக் அமிலம் மற்றும் சல்பர் கலந்த ஷாம்பூகளைப் பயன்படுத்தலாம்.

கீரைச் சாற்றில் வசம்பு, வெள்ளை மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ஒரு டீஸ்பூன் பொடியை நல்லெண்ணெயில் குழைத்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து குளித்தால் பொடுகு தொல்லை தீரும்

வசம்பை தண்ணீர்விட்டு அரைத்து, தலையில் நன்றாகத் தேய்த்து ஊற வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் தலையை நன்றாக அலச வேண்டும். தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பூவைப் பயன்படுத்தி தலையைச் சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதைத் தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக் கூடாது.

பாலுடன் மிளகுத்தூளைச் சேர்த்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம் அல்லது வாரம் ஒருமுறையாவது நல்லெண்ணெய் தேய்த்து தலையை அலசலாம்.

(சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளித்துவந்தால் பொடுகு நீங்கும். வெங்காயத்தில் உள்ள சல்பர், பொடுகை நீக்க உதவுகிறது.

தலைக்குக் குளித்தபின்பு ஈரமான தலையில் கொஞ்சம் வினிகரைத் தண்ணீரில் கலந்து தலைக்குக் குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

பசலைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.

வெந்தய பவுடரைத் தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும்; உடல் சூடும் குறையும்.

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து தலையில் தேய்த்துவர பொடுகு தொல்லை நீங்கி முடி உதிர்வது கட்டுப்படுத்தப்படும்.

அறுகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதைத் தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

வேப்பிலை சாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்த்துவரலாம். வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தும் தேய்க்கலாம்

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 8 பிப் 2018