மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 பிப் 2018

கேரளா: நன்னடத்தைச் சான்றிதழ் அறிமுகம்!

கேரளா: நன்னடத்தைச் சான்றிதழ் அறிமுகம்!

இந்தியாவில் முதன்முறையாக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கு நன்னடத்தைச் சான்றிதழ் வழங்க கேரள அரசு முன்வந்துள்ளது.

கேரளாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்குப் பணியாளர் விசா விண்ணப்பிப்பவர்களின் பின்னணியை அறிந்துகொள்ளும் வகையில் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கும் முறையை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. கேரள அரசு மற்றும் மாநிலக் காவல் துறை ஒருங்கிணைந்து இம்முறையின் செயல்திட்டத்தை திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத்தூதரிடம் வழங்கியுள்ளன.

இந்தச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நபர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் நபரின் பின்னணி, அவர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதா அல்லது அரசியல் செயல்பாடுகளில் பங்கு ஏதும் உள்ளதா என அனைத்தும் இந்தச் சான்றிதழில் விரிவாகத் தெரிவிக்கப்படும். விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர் இந்தச் சான்றிதழை இணைக்க வேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 8 பிப் 2018