மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஆக்கிரமிப்பில் கடவுள் இடம் கேட்பதில்லை!

ஆக்கிரமிப்பில் கடவுள் இடம் கேட்பதில்லை!

அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயிலை இடிப்பதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (பிப்ரவரி 6) உத்தரவிட்டுள்ளது.

சென்னை ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் எதிரே கோட்டை பாளையத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது. எனவே, கோயிலை இடித்து நிலத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாட்சியரும் கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இருப்பினும் நிலம் ஒப்படைக்கப்படவில்லை. தொடர்ந்து கோயில் பூசாரி குருசாமி கோயிலை இடிக்கத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், 50 பக்தர்கள் ஒன்றிணைந்து கட்டிய கோயிலைக் கடந்த 50 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறோம். எனவே, அதிகாரிகள் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று (பிப்ரவரி 6) நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, பூசாரி தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

இதை விசாரித்த நீதிபதிகள், “புராணங்களில் உள்ள பிரகலாதன் கதையில் கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. எந்தக் கடவுளும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயில் கட்டச் சொல்வதில்லை. உண்மையான கடவுள் பக்தியுள்ளவர்கள் இடிக்கப்படும் என்று தெரிந்திருந்தும் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயிலைக் கட்டமாட்டார்கள்” என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018