மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

மத்திய அரசு: தமிழகத்தில் 2022க்குள் எய்ம்ஸ்!

மத்திய அரசு: தமிழகத்தில் 2022க்குள் எய்ம்ஸ்!

தமிழகத்தில் 2022ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவில்லை. அதற்கான நிதியையும் மத்திய அரசு இதுவரை ஒதுக்கவில்லை எனத் தொடர்ந்து புகார்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தஞ்சாவூரில் உள்ள செங்கிபட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை நகரம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை, காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த செங்கல்பட்டு உள்ளிட்ட 5 இடங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு ஏற்ற இடங்களாகத் தேர்வு செய்து அப்போதைய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த 5 இடங்களிலும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்தியக் குழு வந்து ஆய்வு செய்தது. அதன் பிறகு மருத்துவமனை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழகத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படுவது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் "தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை 2017 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்", என்று கடந்த வருடம்(2017) ஆகஸ்ட் மாதத்திலேயே நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விட்டது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

புதன் 7 பிப் 2018