மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

தினகரன் சிரித்துக்கொண்டே அழுகிறார்!

தினகரன் சிரித்துக்கொண்டே அழுகிறார்!

டிடிவி. தினகரன் சிரித்துக்கொண்டே அழுகிறார் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று கதிராமங்கலம் சென்ற ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன், ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிவரும் பொதுமக்களையும் விவசாயிகளையும் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அப்போது பேசிய தினகரன், எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி மாற்றத்துக்கு வாய்ப்புள்ளது என்றும் தனக்கு முதல்வராக வேண்டும் என்ற ஆசை இல்லை; தன்னோடு துணையாக நின்ற 18 தியாகிகளில் ஒருவரை முதல்வராக்குவேன் என்றும் கூறியிருந்தார். மேலும், மீண்டும் தேர்தல் வர வேண்டாம் என நினைக்கும் எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் மனம் திருந்தி வரலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று(பிப்ரவரி 7) பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "திமுகவுடன் சேர்ந்ததால் தினகரனுக்குச் செயல் தலைவரின் தந்தையினுடைய தாக்கம் அதிகமாக உள்ளது. ஆறு பேரைத் தவிர்த்துவிட்டு வர வேண்டுமாம்; 18 பேரில் ஒருவரை முதல்வராக்குவாராம்; இதெல்லாம் நடக்காத ஒன்று. சினிமா பாணியில் சொல்ல வேண்டுமானால் சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; டிடிவி. தினகரன் சிரித்துக்கொண்டே அழுகிறார். தன்னுடன் இருப்பவர்களைத் திருப்திப்படுத்தவே இவ்வாறு பேசுகிறார். அது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும் ஹவாலா நபரைக் காணவில்லை என்று ஆர்.கே.நகர் மக்கள் தினகரனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஹவாலா மூலம் வெற்றி பெற்றவர் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதற்குத் தகுதி கிடையாது" என்று தினகரனைக் கடுமையாக விமர்சித்தார்.

திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் குறித்த கேள்விக்கு , "வைகோவுக்கும் ஸ்டாலினுக்கும் ஏழாம் பொருத்தம். கம்யூனிஸ்ட்களுக்கும் காங்கிரசுக்கும் ஏழாம் பொருத்தம். இது முரண்பட்ட கூட்டணியாகும். பொதுமக்களின் நலனுக்காக இவர்கள் கூட்டணி சேரவில்லை, அம்மா அரசை வீழ்த்துவதற்காகவே கூட்டணி அமைத்துள்ளார்கள். அது ஒருபோதும் நடக்காது. இவர்கள் அனைவரும் பலவீனமானவர்கள். நாங்கள் பலமாக இருப்பதால்தான் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்" என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018