மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

வரி உயர்வால் விலை உயரும் உணவுகள்!

வரி உயர்வால் விலை உயரும் உணவுகள்!

சென்ற வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உணவு உற்பத்திக்கான மூலப் பொருட்கள் சிலவற்றின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளதால் உணவகங்களில் உணவின் விலை 5 சதவிகிதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றின் சுங்க வரி 20 சதவிகிதத்திலிருந்து 35 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கான செலவுகள் 30 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உள்ளீட்டு வரிக் கடன் நீக்கம் மற்றும் விடுதிகளின் மீதான ஜிஎஸ்டி போன்றவற்றால் உணவின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து தற்போது சுங்க வரி உயர்வால் உணவுகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்தின் பிட்சா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இந்தியக் கிளையான கோர்மெட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான தீபிந்தர் பாத் ’தி எக்கனாமிக் டைம்ஸ்’ ஊடகத்திடம் பேசுகையில், “மேற்கத்திய உணவுகளுக்கான சாஸ்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதினால் தான் சுங்க வரி விதிப்புப் பிரச்னை உருவாகிறது. இத்தகைய உணவுகளைத் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களாக இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்களையே பயன்படுத்தினால் இதுபோன்ற சவால்களைச் சமாளிக்க முடியும்” என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018