மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

தமிழகத்தில் 87 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை!

தமிழகத்தில் 87 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை!

நாடு முழுவதும் 1,496 ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் தமிழகத்தில் 87 அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது தெரியவந்துள்ளது.

2017 ஜனவரி 1ஆம் தேதியின் படி, மொத்தம் 6,500 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 5,004 அதிகாரிகள் மட்டும்தான் பணியில்உள்ளனர் என்றும் 1,496 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஜிதேந்திர சிங்மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மாநில வாரியாகப் பற்றாக்குறை விவரங்கள்

உத்தரப் பிரதேசத்தில் 621 அதிகாரிகளுக்கு 515 அதிகாரிகள்தான் உள்ளனர். பிகாரில் 342 அதிகாரிகளுக்கு 243 அதிகாரிகளும், மேற்கு வங்கத்தில் 359 அதிகாரிகளுக்கு 277 அதிகாரிகளும், மத்தியப் பிரதேசத்தில் 439 அதிகாரிகளுக்கு341 அதிகாரிகளும், கேரளாவில் 231 அதிகாரிகளுக்கு 150 அதிகாரிகளும், தமிழகத்தில் 376 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 289 அதிகாரிகளும் மட்டுமே பணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது..

குஜராத்தில் 297 அதிகாரிகளுக்கு 241 அதிகாரிகளும், இமாச்சலப் பிரதேசத்தில் 147 அதிகாரிகளுக்கு 115 அதிகாரிகளும்,ஜம்மு காஷ்மீரில் 137 அதிகாரிகளுக்கு 91 அதிகாரிகளும், நாகாலாந்தில் 94 அதிகாரிகளுக்கு 67 அதிகாரிகளும், சிக்கிமில் 48 அதிகாரிகளுக்கு 37 அதிகாரிகளும் தெலங்கானாவில் 208 அதிகாரிகளுக்கு 130 அதிகாரிகளும், பஞ்சாபில் 221 அதிகாரிகளுக்கு 182 அதிகாரிகளும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 193 அதிகாரிகளுக்கு 153 அதிகாரிகளும் மட்டுமேபணியாற்றுவதாக கூறப்பட்டுள்ளது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018