என் காட்சிகளை நீக்கினார்கள்: கேத்ரின்

‘கணிதன் படத்தில் எனது காட்சிகள் நிறைய வெட்டப்பட்டுவிட்டன’ என்று வருத்தம் தெரிவித்துள்ளார் நடிகை கேத்ரின் தெரசா.
மெட்ராஸ் படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் கேத்ரின் தெரசா. தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துவருகிறார். அவர் நடித்து முடித்துள்ள கலகலப்பு-2 படம் வெளிவரவிருக்கிறது. இதையடுத்து கதாநாயகன் படத்தில் நடித்துவருகிறார்.
இந்த நிலையில், 2 வருடங்களுக்கு முன் அதர்வாவுக்கு ஜோடியாக கணிதன் படத்தில் நடித்தார் கேத்ரின். அப்படம் தமிழில் வரவேற்பைப் பெற்றதால் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தெலுங்கில் உருவாகவிருக்கும் இப்படத்தில் கேத்ரின் ஹீரோயினாக நடிக்க உள்ளதாகத் தகவல் பரவியது. ஆனால் இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.