மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

தமிழிசை- செங்கோட்டையன் சந்திப்பில் அரசியலா?

தமிழிசை- செங்கோட்டையன் சந்திப்பில் அரசியலா?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண் சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்த நிலையில் இன்று (பிப்ரவரி 7) தலைமைச் செயலகத்தில் தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்துப் பேசினார்.

இன்று பகல் 12 மணியளவில் தலைமைச் செயலகம் வந்த தமிழிசை,அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து சுமார் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிரதமர் மோடி எழுதிய, ‘எக்ஸாம் வாரியர்ஸ்’ என்ற மாணவர்களுக்கான நூலை செங்கோட்டையனுக்குப் பரிசாகக் கொடுத்தார் தமிழிசை. நீட் தேர்வுப் பயிற்சி மையங்கள் குறித்தும் செங்கோட்டையனுடன் தமிழிசை பேசினார் என்றும் பாஜக தரப்பில் சொல்கிறார்கள்.

இந்த சந்திப்புக்கு அரசியல் பின்னணி ஏதும் இருக்கிறதா என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சமீப காலமாக அமைச்சர்கள் பலரும் மத்திய அரசை விமர்சித்துவருகிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசின் பட்ஜெட்டை வரவேற்றபோதும் மத்திய அரசின் நிதி தமிழகத்துக்கு முறையாக வரவில்லை என்று வேலுமணி, ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் போன்றோர் வெளிப்படையாகவே சொல்லிவருகிறார்கள். ஆனால் அப்போதிலிருந்து இப்போது வரை செங்கோட்டையன்தான் உள்கட்சி விவகாரத்திலும் சரி, பாஜக விவகாரத்திலும் சரி, எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் மிக கவனமாகத் தவிர்த்துவருகிறார்.ஏற்கனவே செங்கோட்டையன் டெல்லி சென்றபோது அமித் ஷாவை ச் சந்தித்தார் என்றும், எடப்பாடிக்கு பதில் செங்கோட்டையனை முதல்வராக்க டெல்லி முயற்சித்தது என்றும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் இப்போது தமிழிசை -செங்கோட்டையன் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானதா மாற்றம் நிமித்தமானதா என்பது விரைவில் தெரியும்’’ என்கிறார்கள்.

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

மார்க்கெட்டில் குவிந்த சின்ன வெங்காயம்: விலை சரிவால் விவசாயிகள் கவலை!

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

உள்ளூர் மொழிகளும் தேசிய மொழிகள் - கல்வி அமைச்சர்!

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

3 நிமிட வாசிப்பு

நான்கு வழிச் சாலை பணியைத் தடுத்து நிறுத்திய கிராம மக்கள்!

புதன் 7 பிப் 2018