மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

பொய்யெனப் பெய்கிறது மோடி மழை -அப்டேட் குமாரு

பொய்யெனப் பெய்கிறது மோடி மழை -அப்டேட் குமாரு

நான்லாம் அமைச்சர்களின் தீவிர தொண்டன்னு சொன்னா சத்தமா சிரிக்கிறாய்ங்க. சத்தியமா எனக்கு மானம், ரோசமெல்லாம் கிடையாது. இப்படித்தான் போன வருசம் இன்னைய தேதிக்கு ‘வந்துட்டாண்டா என் தலைவன்’னு கத்திக்கிட்டே தர்மயுத்தத்துக்கு சில்லறைய சிதறவிட்டேன். பாத்தா என் தலைவன் ரூவா நோட்டா மாத்திக்கிட்டு தூ.மு-வா செட்டில் ஆயிட்டாப்ல. நான் மட்டும் இங்க வந்து டைப் பண்ணிக்கிட்டிருக்கேன். தினகரன் கூட போயிருந்தாலாவது ‘சனி நம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகுது. ஆனா, நம்ம ராசியான சின்னம்மாவே ஜெயிலுக்கு போய்ட்டாங்களே தலைவா’ன்னு ஒப்பாரி வெச்சு அமவுண்டை தேத்தியிருக்கலாம் போல. ஸ்டேட் லெவல்ல இவ்வளவு காம்பெடிஷன் இருக்கேன்னு பாத்தா, மத்தியில அதுக்கும் மேல. ராஜ்யசபாவுல பேசாம இருந்தா, வெளிநாடு போகும்போதுன்னு அட்டெண்டன்ஸ் போட வந்த மோடியை ‘பொய் சொல்றார் டீச்சர்’ன்னு சொல்லி பேச உடாம பண்ணிட்டாங்க. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா உங்களுக்கு. அவசர அவசரமா ஃபாரீன் போய் ஃபோட்டோ எடுக்க இருந்தவரை இப்படி புண்ணாக்கி அனுப்பியிருக்கீங்களே. சரி, இதெல்லாம் சரிவராது வேற வேலையை பாப்போம்னா, பகோடா கடையை வெச்சோம்னா நானே திண்ணு தீத்துருவேன். பேசாம விஷத்தைக் கலந்துருவோமான்னு கூகிள் பண்ணி பாத்துட்டு வர்றேன். அப்டேட்டைப் படிச்சிட்டு இருங்க.

கருப்பு கருணா

விஜய் மல்லையா கடன் பெற்ற ஆவணங்கள் தங்களிடம் இல்லை - மத்திய நிதியமைச்சகம்

விஜய் மல்லையான்னு ஒரே ஆளே எங்க நாட்டுல இல்லை.அது பாகவத புராணத்துல வர்ற ஒரு மல்யுத்த வீரன் பாத்திரம்ன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருங்க சார்!

மித்ரன்

குழந்தைகளை போல எப்போதும் முதலில் பேட்டிங் செய்ய காங்கிரஸ் விரும்புகிறது - மோடி #

நாட்டை பிட்சாக்கி ரெண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கீங்களே பாஸ்!?

Muru Gesh

ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கும்போது எடப்பாடி பழனிசாமி, தினகரன் ரெண்டு பேருமே சீன்ல் இல்லை. ஆனா, முழுசா ஒருவருசம் கடந்த நிலையில், ஓபிஎஸ் சீன்ல் இல்லாதவாறு இருவருமே பார்த்துக்கொள்கிறார்கள்..

Alexander Lawrence

பைபிளில் முதல் முதலில் சம உரிமை கேட்டது சாத்தான்தான் !

Arun Bharathi

துக்கடா பயலுவல்லாம் ஆட்சிக்கு வந்துட்டா பக்கோடா விக்கிறதக் கூட பவுசுன்னு தானே சொல்லுவானுவோ.

Surya Xavier

பசுமாட்டு மூத்திரம் கூட புனிதமானது.

ஆனால் எருமையின் பால் கூட தீட்டானது.

தீட்டு-புனிதம் என்பதெல்லாம்

ஆதிக்க வர்க்க மதிப்பீடுகளே.

Kopithɑ

தேவைப்படும்போது தானே நம்மை தேடுகிறார்கள் என வருந்த வேண்டியதில்லை..

மின்சாரம் இல்லாதபோது தேடும் மெழுகுவர்த்தியாகவாவது இருக்கிறோமே என பெருமைப்படலாமே...

Don Vetrio Selvini

அரசு வேலைக்கு செல்ல இளைஞர்களுக்கு ஆர்வமில்லை - மோடி

1,500 அரசு பணியிடங்களுக்கு 5,00,000 விண்ணப்பங்கள்-கேரளா

Prabakar Kappikulam

நாலு ஸ்கூட்டி வாங்குறதுக்கு மானியம் 4 X 25 ஆயிரம் = ஒரு லட்சம்

அந்த ஒரு லட்சத்துல ஒரு ஓட்டை உடைசல் அரசு டவுண் பஸ்ஸை சரி செய்யலாம்.

ஆனா என்ன, அந்த ஒரு குடும்பத்து ஓட்டும் கிடைக்காது, டூவீலர் கம்பெனி கொடுக்கிற கமிசனும் கிடைக்காது.

ѕтαℓιи кαятнιк

சவுத் ஆப்ரிக்கால டெஸ்ட், ஒன்டேல தொடர்ந்து 7இன்னிங்ஸ்ல ரோகித் அடிக்கவே இல்லை

பட் இதுவே யுவி, சேவாக்லாம் இருக்கும் போது ரெண்டு மேட்ச் ஆடுலனா பார்ம் அவுட்னு தூக்கிடுவானுங்க

மித்ரன்

பிரதமரிடம் இருந்து வேலைவாய்ப்பைத்தான் மக்கள் எதிர்பாக்கிறார்கள்; சொற்பொழிவை அல்ல - சோனியாகாந்தி #

ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமா சொன்னீங்க மேடம்..

இளநிலா

வாய்பு கிடைத்தும் பயண்படுத்தாதவர்களை நினைத்து வருந்தாதீர்கள்..!!

வாய்புக்காக தேடி அலைந்திடும் சிலரை ஊக்கப்படுத்த முயலுங்கள்..!!

மண்ணின் மைந்தன்

மீனாட்சி அம்மன் கோவில் கற்கள் சூடாக இருப்பதால் அவற்றை குளிர்விக்கும் பணி நடைப்பெற்று வருகிறது- செல்லூர் ராஜூ

அம்புட்டு வேட்டி,சேலைய வச்சு சூடாகாம பந்தல் போடுங்கடா...வெயில் அடிச்சாதான சூடாகும் - விஞ்ஞானி ராசுபாய்

சிதறல்கள்

ஆறடிக்கு மேல் வளர்ந்தவர்களுக்கு நல்ல வரன் தேடுவதற்குள் குதிரைக்கே கொம்பு முளைத்துவிடும் அவ்ளோ கஷ்டம்

நான் வளர்கிறேன் மம்மி போல வளர்ந்தவர்கள் பூஸ்ட் ஹார்லிக்ஸ் குடிக்காமல் இருப்பதே நல்லது

நிவந்திகா தேவி

நாலு வருடங்களுக்கு முன்பு நாம் வியந்து பாராட்டித் திரிந்த ஆளுமைகள் இப்போது கோமாளிகளாக மாறி நம்மைக் கடுப்பேத்துவதுதான் நமக்கான ஆகப் பெரிய அவமானம். அதற்கு சமீபத்திய உதாரணம் பக்கோடா மோடி

P C ஷுபா

தனிக்குடித்தனம் போவதுகூட

தெரியாமல் புன்னகையுடன்

தாத்தாவுக்கு டாட்டா காட்டி

செல்கிறது பேரக் குழந்தை.

SHIVA SWAMY.P

பக்கோடா கடைகூட போடாம, இன்னும் வேறவேலை தேடிக்கொண்டு இருப்பவர்களை தேசத்துரோகி என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்....! அமைச்சரே

ஐம்பூதங்கள்

"உயிருக்கு" பயந்து ஹெல்மெட் போடுவதை விட "குளிருக்கு" பயந்து ஹெல்மெட் போடுபவர்கள் தான் அதிகம்

ச ப் பா ணி

தமிழன்டா னு பைக்கில் எழுதிய நண்பனின் மகள் பெயர் கேட்டேன்"ஹார்ஸிஸ்கா"வாம்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018