67 அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி!


நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுமார் ரூ.11,703 கோடி மதிப்பிலான 67 அந்நிய நேரடி முதலீட்டுக் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக நிதித்துறை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 6ஆம் தேதி மாநிலங்களவையில் இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சரான பி.ராதாகிருஷ்ணன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “2017 ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 31 வரையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி கோரிய 67 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.11,703 கோடியாகும். அதிகபட்சமாக மெட்டாஃபினிட்டி பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் ரூ.532 கோடி மதிப்பிலான முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.