மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ரியல் போலீஸ்: விஷால் வாழ்த்து!

ரியல் போலீஸ்: விஷால் வாழ்த்து!

மாங்காடுக்கு அருகிலுள்ள மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பினு என்கிற ரவுடியின் பிறந்தநாளைக் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்ட ரவுடிகளைப் பிடித்தது சென்னை காவல் துறை. திடீரென நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கையால், அதிர்ச்சியில் உறைந்துபோன மக்கள் பின்னர் சுதாரித்து, காவல் துறையினரை பாராட்டிவருகின்றனர். அவர்களில் ஒருவராக நடிகர் விஷால் தனது நன்றியைக் காவல் துறையினருக்குத் தெரிவித்திருக்கிறார்.

“சென்னை காவல் துறையினர் ரைடு ஆபரேஷன் மூலம் 67 ரவுடிகளை ஆபத்தான ஆயுதங்களுடன் கைது செய்ததை அறிந்து மிகவும் ஈர்க்கப்பட்டேன். சென்னை கமிஷனர் திரு ஏ.கே.விஸ்வனாதனின் சிறந்த தலைமைப் பண்பு மற்றும் துணை கமிஷனர் திரு சர்வேஷின் சிறப்பான நடவடிக்கையை நான் தாழ்மையுடன் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “நாம் இதுவரை ரீல் உலகத்திலேயே பார்த்துவந்த சிறப்பான போலீஸ், ரியல் உலகத்திலும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அந்த ரியல் லைஃப் ஹீரோக்களை வணங்குகிறேன்” என்று கூறியிருக்கிறார் விஷால்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018