மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

கூண்டுடன் பிடிபட்ட ரவுடிகள்!

கூண்டுடன் பிடிபட்ட ரவுடிகள்!

சென்னை பூந்தமல்லி அருகே நேற்று (பிப்ரவரி 6) நள்ளிரவு நடைபெற்ற ரவுடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 73 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்.

சூளைமேட்டை சேர்ந்த பிரபல ரவுடி பினு தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அப்பகுதியில் உள்ள லாரி செட் ஒன்றில் ஏற்பாடு செய்திருப்பதாகவும், இதற்காகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து தனது நண்பர்களை வரவழைத்திருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்களைப் கூண்டோடு கைது செய்ய போலீசார் திட்டமிட்டு, வழக்கமாகச் செல்லும் போலீஸ் ஜீப்பில் செல்லாமல் கார்களில் சென்று அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர்.

அங்கே இருந்த லாரி ஷெட்டுக்கு வெளியே ஏராளமான கார், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அம்பத்தூர் துணை கமி‌ஷனர் சர்வேஸ்ராஜ் தலைமையில், உதவி கமி‌ஷனர்கள் கண்ணன், வில்சன், நந்தகுமார் மற்றும் 10 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 15 நேரடி சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 50 பேர் கொண்ட போலீஸ் படை தயார் நிலையில் துப்பாக்கிகளுடன் லாரி செட்டுக்குள் அதிரடியாகப் புகுந்தது. போலீசாரை கண்டதும் ரவுடிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அப்போது 73 ரவுடிகளை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மேலும் சிலர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட ரவுடிகளிடம் இருந்து 60 மோட்டார் சைக்கிள்களும், 10 ஆட்டோக்களும், 7 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 73 ரவுடிகளையும் போலீசார் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். இந்த அதிரடி வேட்டை தொடர்பாக உதவி காவல் ஆணையர் கண்ணன் , “நேற்று 100 ரவுடிகள் ஒரே இடத்தில் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும், இன்னொரு பக்கம் சந்தோசமாகவும் இருந்தது. எங்கள் வேலை எளிதானது. நாங்கள் விரித்த வலையில் 73 பேர் சிக்கினர். இதில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களையும் பிடித்து விடுவோம். பொதுமக்கள் தங்கள் பகுதியில் இதுபோல ரவுடிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டால் அதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் பிடிபட்டவர்களில் 8 பேர் கொலை வழக்கில் அரஸ்ட் வாரண்ட் பெற்ற ரவுடிகள் என்றும் குற்றச்செயல்களில் தொடர்புடைய ரவுடிகளை, அந்தந்த மாவட்ட காவல்நிலையத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 7 பிப் 2018