மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

தங்கம் பயன்பாடு 9% உயர்வு!

தங்கம் பயன்பாடு 9% உயர்வு!

2017ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 9.1 சதவிகிதம் உயர்ந்து 727 டன்னாக இருந்ததாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் பயன்பாடு (தேவை) 666.1 டன்னாக இருந்தது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் அது 9.1 சதவிகித உயர்வுடன் 727 டன்னாக அதிகரித்துள்ளது. தாந்தெராஸ் பண்டிகை சமயத்தில் தங்கத்தின் விலை குறைவாக இருந்ததாலும், கிராமப் புறங்களில் தேவை அதிகரித்ததாலும் ஒட்டுமொத்தமாகத் தங்கத்துக்கான தேவை இந்தியாவில் உயர்ந்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின் தாக்கம் சீராகி, நகை விற்பனை இயல்பு நிலைக்குத் திரும்பியதால் தங்கம் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகை விற்பனையில் பண மோசடிச் சட்டம் ரத்து செய்யப்பட்டதும் ஒரு காரணம் என்று உலக தங்க கவுன்சில் இந்தியப் பிரிவின் நிர்வாக இயக்குநரான சோமசுந்தரம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018