மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய லாரன்ஸ்

சொன்ன வார்த்தையைக் காப்பாற்றிய லாரன்ஸ்

ஜல்லிக்கட்டுப் போரட்டத்தின்போது உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.

கடந்த ஆண்டு உலக மக்கள் அனைவரின் பார்வையையும் தமிழ்நாட்டுப் பக்கம் திருப்பியது ஜல்லிக்கட்டுப் போராட்டம். இந்தப் போராட்டத்தில் எந்தவிதப் பாகுபாடுமின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்துகொண்ட ஜல்லிக்கட்டுப் போரட்டத்திற்குத் திரைப் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கூட தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட சேலத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்கிற இளைஞர் மீது மின்சார ரயிலின் கம்பி எதிர்பாராத விதமாக பட்டு மரணமடைந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இது சம்பந்தமாக லாரன்ஸ், இந்த விபத்தில் மரணமடைந்த யோகேஸ்வரனின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறியது மட்டுமன்றி, ‘நான் உங்கள் மகனாக இருந்து அவர் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்கிறேன்’ என்று கூறியதோடு, யோகேஸ்வரனின் தங்கையின் படிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார்.

இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 6) பிஹைண்ட் வுட்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “லாரன்ஸ் தற்போது யோகேஸ்வரன் குடும்பத்தினர் வாழ்வதற்காக ஒரு இடத்தை வாங்கி அதில் 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்திருக்கிறார். விரைவில் அந்த வீட்டில் கிரகப்பிரவேசம் நடைபெற உள்ளது” என்று குறிப்பிடப்பட்டது.

தற்போது அதை உறுதி செய்யும் விதமாக லாரன்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “நண்பர்களே! சென்ற ஆண்டு இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றோம். ஆனால் போராட்டத்தின் போது யோகேஸ்வரன் என்ற இளைஞரை இழந்து விட்டோம். நான் அவனது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டபோது ஜல்லிக்கட்டு போரட்டத்தின் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதே போல் யோகேஸ்வரனின் குடும்பத்தின் மகிழ்ச்சியும் முக்கியம் என்று எண்ணினேன். அப்போது அவனது அம்மாவிடம் யோகேஸ்வரன் இந்த குடும்பத்திற்கு என்ன செய்வானோ அதை நான் செய்கிறேன் என்று சத்தியம் செய்தேன். இப்போது நான் யோகேஸ்வரன் இடத்தை பூர்த்தி செய்து விட்டேன் என்று மகிழ்ச்சியில் இருக்கிறேன். இன்று அவர்களுக்காக கட்டப்பட்ட வீட்டின் கிரகபிரவேசம். ஆனால் இது உதவி அல்ல இதை என் கடமையாகவே நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018