மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

அரிசியைச் சேமிக்கத் தொழில்நுட்பக் கிடங்குகள்!

அரிசியைச் சேமிக்கத் தொழில்நுட்பக் கிடங்குகள்!

அரிசியைச் சேமித்து வைப்பதற்கான உயர்தர அரிசி கிடங்குகள் அமைக்கவுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரிசி அதிகமாக உற்பத்தியாகும் மாநிலங்களில் அதிகப்படியான அரிசியைப் பாதுகாத்துச் சேமித்து வைப்பதற்காக உயர்தர தொழில்நுட்பக் அரிசி கிடங்குகள் அமைக்கவுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான பொறுப்பை பீகார் மாநிலம் கைமுர் மற்றும் புக்ஸார் பகுதிகளிலுள்ள அரசுக்குச் சொந்தமான இந்திய உணவுக் கழகம் ஏற்றுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் முழுமையாகத் தயாராகும் பட்சத்தில் மேற்குவங்க மாநில அரசு இதுபோன்ற அரிசி சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ஆர்வம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அரிசியைப் போலவே கோதுமை சேமிப்புக்கும் இதுபோன்ற சேமிப்புக் கிடங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பஞ்சாப், டெல்லி, பீகார், அசாம் மற்றும் கர்நாடகா போன்ற ஆறு இடங்களில் இக்கிடங்குகளை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் கோட்காபுரா நகரில் 25,000 டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாபா நகரில் 50,000 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு ஒன்றை அமைக்கும் பணியில் மத்திய கிடங்குகள் கார்ப்பரேசன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மொத்தம் 17 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் அமைக்கும் முயற்சியில், 1.5 லட்சம் டன் கொள்ளவுள்ள கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018