மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

குற்றச்சாட்டு வேண்டாம்; பதில் வேண்டும்!

குற்றச்சாட்டு வேண்டாம்; பதில் வேண்டும்!

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 7) ஆற்றிய உரையை விமர்சனம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ”எங்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் வேண்டாம்; கேள்விகளுக்குப் பதில் வேண்டும்” என்று கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியபோது, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், இன்று (பிப்ரவரி 7) மக்களவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, சுமார் 90 நிமிடங்கள் பேசினார்.

தனது பேச்சில், அவர் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்திய பிரிவினை முதல் காஷ்மீர் விவகாரம் வரை, அனைத்துக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று குறிப்பிட்டார் மோடி. அவரது பேச்சின் இடையே, காங்கிரஸ் கட்சியினர் கூச்சலிட்டனர்.

இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு மோடி பதில் சொல்லவில்லை. மாறாக, தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுவது போலவே அவர் பேசினார்” என்று தெரிவித்தார். ”மோடி, தான் பிரதமர் என்பதையே மறந்துவிட்டார். அவர் இப்போது பதில் சொல்ல வேண்டும்; ஆனால், அவர் எதிர்கட்சிகளைப் பற்றி குற்றச்சாட்டுகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்தில் இருக்கும் நீங்கள் பதில்களைச் சொல்ல வேண்டும். மாறாக, நீங்கள் கேள்விகள் கேட்கக்கூடாது” என்று விமர்சித்தார்.

மேலும், “ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினார் மோடி. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் குறித்தோ, விவசாயிகள் பிரச்சனை பற்றியோ, வேலைவாய்ப்பு பிரச்சனை பற்றியோ, அவர் வாய்திறக்கவில்லை” என்றார். காங்கிரஸ் கட்சி குறித்து விமர்சிக்க மோடிக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று குறிப்பிட்ட ராகுல், அதற்கேற்ற இடம் நாடாளுமன்றம் அல்ல என்று தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராகுல் இவ்வாறு பேசினார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

புதன் 7 பிப் 2018