திராட்சை ஏற்றுமதி தீவிரம்!


நல்ல அறுவடை மற்றும் ஐரோப்பிய, ரஷ்ய நாடுகளில் தேவை உயர்வு போன்ற காரணங்களால் இந்தியாவின் திராட்சை ஏற்றுமதி முன்னதாகவே தொடங்கிவிட்டது.
ஜனவரி மாத மத்தியில் தொடங்கிய ஏற்றுமதியில் இதுவரையில் 28 சதவிகித உயர்வுடன் மொத்தம் 15,383 டன் அளவிலான திராட்சை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி அளவு 12,058 டன்னாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் பகுதியில் ஒக்கி புயலின் தாக்கத்தாலும் பலத்த மழையாலும் 20 முதல் 25 சதவிகிதம் வரையிலான பயிர்கள் சேதமடைந்த போதிலும் ஏற்றுமதியில் உயர்வு ஏற்பட்டுள்ளது. நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு வழக்கமான ஏற்றுமதியில் பாதிக்கும் மேலான திராட்சைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.