மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

போலீஸ் வேடத்தில் நிவேதா

போலீஸ் வேடத்தில் நிவேதா

‘டிக் டிக் டிக்’ படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து விண்வெளி வீராங்கனையாக நடித்த நிவேதா, அடுத்ததாக விஜய் ஆண்டனியுடன் இணைந்து போலீஸ் அதிகாரியாக மிரட்டவிருக்கிறார்.

ஒரு நாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய இரண்டு படங்களே நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா நடித்திருக்கும் டிக் டிக் டிக் திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. அதோடு இவர் கிளாமராக நடித்திருக்கும் காமெடி ஜானர் படமான பார்ட்டியும் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஜகஜால கில்லாடி படத்தில் நடித்துவரும் நிவேதா, அடுத்ததாக விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படத்திற்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்கள் கொண்ட தோற்றத்தை வெளிப்படுத்த விரும்பும் விஜய் ஆண்டனி இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நிவேதாவும் போலீஸ் வேடத்தை ஏற்று நடிக்கிறார். நம்பியார் படத்தின் மூலம் கவனம்பெற்ற கணேசா இந்தப் படத்தை இயக்குகிறார். வில்லனாக டேனியல் பாலாஜி நடிக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று (பிப்ரவரி 7) துவங்கியுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைப்பதோடு, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்ரேஷன்’ மூலம் படத்தைத் தயாரிக்கிறார். ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018