மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஏமாற்றமளித்த மாற்றம்!

ஏமாற்றமளித்த மாற்றம்!

கேப்டவுனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன் சேர்த்து வருகிறது.

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 7) கேப்டவுனில் தொடங்கியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி எந்தவித மாற்றமும் இன்றி களமிறங்கியது. ஆனால் தென்னாப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் காயம் காரணத்தால் வெளியேறியதால் அவருக்கு பதிலாக ஹென்ரிக் க்லாசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி அனுபவ வீரர் மோர்னி மோர்க்கல் வெளியேற்றப்பட்டு, அவர்க்கு பதிலாக இளம் வீரர் லுகிஷானி நிகிடிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர் இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் திணறடித்தார் என்பதால் இவருக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த முறை எதிர்பார்த்தது போல் நடைபெறாமல் தென்னாப்பிரிக்க அணி அடைந்தது. இந்திய அணி சேஸிங்கில் சிறப்பாக விளையாடும் என்பதால் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்றதும் அணியின் கேப்டன் ஏய்டன் மார்க்ராம் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.

அதற்கு ஏற்றாற்போல் இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவும் ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அளித்தார். ஆனால் அதன்பின்னர் ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ஷிகர் தவன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை விக்கெட் இழப்பின்றி காத்து வந்தனர். இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டினை மட்டும் இழந்து 50 ரன்களை சேர்த்திருந்தது. அதன்பின்னர் வழக்கமான அதிரடியுடன் விளையாடிய தவன் 42 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த கேப்டன் விராட் கோலியும் 64 ஆவது பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். தவன் 76 ரன்கள் சேர்த்த நிலையில் டும்னி பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின்னர் ரஹானே களமிறங்கி 11 ரன்கள் சேர்த்த நிலையில் டும்னி பந்தினை தூக்கி அடிக்க முயற்சி செய்து தேவையில்லாமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா களமிறங்கினார். இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறது. இந்திய அணி மீதமுள்ள ஓவர்களில் அதிரடியாக விளையாடி நல்ல ஸ்கோரினை எட்டும் பட்சத்தில் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலை பெற முடியும். இதற்காக இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை ஆர்வமுடன் கண்டு வருகின்றனர்.

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

3 நிமிட வாசிப்பு

மோசமான டிரைவிங் நகரங்கள்: எந்த இடத்தில் சென்னை?

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அறநிலையத் துறையில் பணி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

3 நிமிட வாசிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் - ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்

புதன் 7 பிப் 2018