மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயரும்!

தமிழக மருத்துவக் கல்லூரிகளின் தரம் உயரும்!

தமிழகத்திலுள்ள 4 மருத்துவக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் 2018-2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறித்து அதிமுக எம்.பி லட்சுமணன் மக்களவையில் நேற்று (பிப்ரவரி 6) கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே, “நாடு முழுவதும் கடந்த 2016ஆம் ஆண்டு 13 மருத்துவக் கல்லூரிகள் தரம் உயர்த்துவதற்காகத் தேர்வு செய்யப்பட்டன. அதில் மாநில வாரியாக எந்தெந்த கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதை மத்தியப் பொருளாதார விவகாரக் குழு முடிவு செய்தது. அந்த வகையில் தமிழகத்தில் 4 கல்லூரிகள் தரம் உயர்த்தப்படவுள்ளன. அவை தஞ்சை, மதுரை, சேலம், நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவையாகும்.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.120 கோடியும், மதுரை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.125 கோடியும், சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.100 கோடியும், நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.120 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசு சார்பிலும் முறையே ரூ.30 கோடி, ரூ.25 கோடி, ரூ.39 கோடி, ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018