மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஹெல்த் ஹேமா: குளிருக்கேற்ற கருப்பட்டி காபி!

ஹெல்த் ஹேமா: குளிருக்கேற்ற கருப்பட்டி காபி!

காலையில் எழுவதே பெரும் சவாலாக இருக்கிறது. வெளியில் சமூகம் அப்படி இருக்கிறதோ இல்லையோ, குளிர் மிரட்டி எடுக்கிறது. குளிர்காலத்தில் வரும் தும்மல், சளி, இருமலுக்குப் பயந்தும் பலர் எழுவதில்லை. எழுந்த உடன் ஆரோக்கியமான சுடச்சுட கருப்பட்டி காபி ஒன்றை கரங்களில் கொண்டுவந்தால் எப்படி இருக்கும்?

நினைத்துப்பார்த்தாலே மகிழ்ச்சி கொள்கிறதே... செயல்படுத்தியும் பார்க்கலாம் வாருங்கள்.

சளி, இருமல், தொண்டைப்புண், தொண்டை கரகரப்பு, தொண்டைக்கட்டு போன்ற பிரச்னைகளுக்குக் கிராமப்புறத்தில் பின்பற்றப்படும் வைத்தியம்தான் சூடாக ஒரு கப் கருப்பட்டி காபி குடிப்பது. இந்த காபியில் உள்ள மருத்துவக் குணங்களின் மூலம், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, புத்துணர்ச்சியைப் பெற முடியும்.

சரி, இப்போது அந்தக் கருப்பட்டி காபியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து குடித்து, உங்கள் உடம்பைத் தேற்றிக் கொள்ளுங்கள். சொல்லப்போனால் இதனை மழைக்காலத்தில் தினமும் செய்து குடித்துவந்தால், நோய்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம்.

தேவையான பொருள்கள்

தண்ணீர் – 1 கப்

சுக்கு பொடி – 1 டீஸ்பூன்

கருப்பட்டி – 1 டேபிள்ஸ்பூன்

உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – அரை கப்

மல்லி – 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பனங்கற்கண்டு – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை

முதலில் சுக்கு பொடி தயாரிக்க கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதனை காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுக்குப் பொடி ஒரு டீஸ்பூன் மற்றும் கருப்பட்டியைச் சேர்த்து, 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு, அதை இறக்கி வடிகட்டினால், சூடான கருப்பட்டி காபி ரெடி.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018