மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

மீனாட்சியம்மன் கோயில்: விசாரணை ஒத்திவைப்பு!

மீனாட்சியம்மன் கோயில்: விசாரணை ஒத்திவைப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கிழக்கு ராஜ கோபுரப் பகுதியிலிருந்து சுந்தரேஸ்வரர் சுவாமி சன்னதி செல்லும் வழியில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தின் அருகே கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிக வெப்பம் காரணமாக வீரவசந்தராயர் மண்டபத்தின் ஒரு பகுதி மேற்கூரை உட்பட ஒரு சில கல் உத்திரங்களும் இடிந்து விழுந்தன. இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட மண்டபத்திற்கு அருகே உள்ள பசுபதி ஈஸ்வரர் சன்னதி மேற்கூரை நேற்று இரவு (பிப்ரவரி 6) இடிந்து விழுந்தது. அப்பகுதியில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

வணிக நோக்கங்களுக்காகக் கோயிலின் பழமையான கட்டமைப்புகளில் ஒருசில மாற்றங்கள் செய்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், “கலாச்சாரத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் கோயில்களின் பழமையைப் பாதுகாக்க வேண்டும். அவற்றின் உள்கட்டமைப்புகளில் மாற்றம் செய்வதைத் தடுத்து, கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என குமரியைச் சேர்ந்த வக்கில் அபுல் கலாம் ஆசாத் சுல்தான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018