மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

‘2.0’: முந்தும் காலா

‘2.0’: முந்தும் காலா

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் வெளியீடு தாமதமாவதால், அதே நாளில் ரஜினியின் ‘காலா’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘2.0’. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 400 கோடி ரூபாய் பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தியா மட்டுமன்றி உலக அளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

‘2.0’ படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் நீண்டகாலமாக நடைபெற்றுவருகின்றன. முழுக்க 3டி கேமரா தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் படம் என்பதால், கிராஃபிக்ஸ் காட்சிகள் செய்வதில் கடினமாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தார்கள். ஷங்கர், தான் நினைத்தது போன்று கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கவேண்டுமென தீவிரம் காட்டிவருகிறார். இதனால்தான் வெளியீட்டுத் தேதியை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் தாமதப்படுத்திவருகிறது படக்குழு. இதன் காரணமாக ஏப்ரல் வெளியீடும் சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கபாலி படத்தை அடுத்து ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் உருவாகிவருகிறது ‘காலா’ திரைப்படம். இப்படத்தினை நடிகர் தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் சமுத்திரக்கனி, நானா படேகர், ஹூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ரஜினி தனக்கான டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்துள்ளார். தற்போது இதன் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. விரைவில் அதுவும் முடிவடையவுள்ளது. இதனால் ‘2.0’ படத்திற்கு பதிலாக ‘காலா’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு ஆலோசித்துவருகிறது. இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

புதன் 7 பிப் 2018