மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

ஆன்லைன் ஆள் சேர்ப்பு அதிகரிப்பு!

ஆன்லைன் ஆள் சேர்ப்பு அதிகரிப்பு!

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கையில் 12 சதவிகித வளர்ச்சி கிட்டியுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை குறித்து மான்ஸ்டர்.காம் இணையதளம் சார்பாக ஒவ்வொரு மாதமும் ஆய்வு விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி மாதத்துக்கான மான்ஸ்டர் வேலைவாய்ப்புக் குறியீடு 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக வீட்டு உபயோகப் பொருட்கள் துறையில் ஆன்லைன் வேலைவாய்ப்புகள் 71 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இத்துறையில் கடந்த ஆறு மாதங்களாகவே சராசரியாக 15 சதவிகித உயர்வு காணப்படுவதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஆன்லைன் வாயிலாகப் பணியமர்த்தும் நடவடிக்கை 46 சதவிகிதம் உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து நிதிச் சேவைகள் துறையில் 36 சதவிகித வளர்ச்சி பதிவாகியுள்ளது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018