மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்காதது ஏன்?

மீனவர்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்காதது ஏன்?

‘மீனவர்களுக்கென மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்காதது ஏன்?’ என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவை திரும்பப்பெற மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டியும், இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நேற்று (பிப்ரவரி 6) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவர் காங்கிரஸ் தலைவர் எம்.கஜநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மத்திய அரசு அதில் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க செய்யும், படகுகளையும் மீட்கும். ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களின் பிரச்னை தீர்ந்துவிடும் என்று ஒரு பொய்யான வாக்குறுதியை அளித்து தமிழக மீனவர்களை மத்திய பாஜக அரசு ஏமாற்றிவிட்டது” என்று குற்றம்சாட்டினார் திருநாவுக்கரசர்.

தொடர்ந்து அவர், “ஏற்கெனவே தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் தொல்லைகளோடு புதிதாக இலங்கை கொண்டுவந்துள்ள மீன்பிடி தடைச் சட்டத்தால், மீனவர்கள் மிகவும் அச்சத்துக்குள்ளாகி மீன்பிடி தொழிலே அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு இலங்கை அரசிடம் வலியுறுத்தி தமிழக மீனவர்களைக் காக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “மீனவர்களைப் பாதுகாப்பதற்காகத் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், நான்கு ஆண்டுகளாக ஏன் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை” என்றும் கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் குமரி ஆனந்தன், கே.வி.தங்கபாலு உள்ளிட்டோரும் வசந்தகுமார் எம்.எல்.ஏவும் பங்கேற்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

புதன் 7 பிப் 2018