மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

சாய் பல்லவி மீது நடிகர் புகார்!

சாய் பல்லவி மீது நடிகர் புகார்!

‘படப்பிடிப்பின்போது முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்’ என்று சாய் பல்லவி மீது தெலுங்கு நடிகர் நாக சௌரியா சரமாரியாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் சாய் பல்லவி. இந்தப் படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் கதாபாத்திரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனையடுத்து தெலுங்கில் அவர் நடித்த ‘ஃபிடா’ படமும் வெற்றி பெற்றது. தற்போது விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் ‘கரு’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதில் சாய் பல்லவியுடன் இணைந்து தெலுங்கு நடிகர் நாக சவுரியா நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் சாய் பல்லவி மீது நாக சௌரியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாக சௌரியா பேட்டி ஒன்றில், “சாய் பல்லவியைப் பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. படப்பிடிப்பில் அவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை. முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். சிறுசிறு விஷயங்களுக்குக் கூட கோபப்பட்டார். தெலுங்கில் அவர் நடித்த ஃபிடா படம் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு சாய் பல்லவி காரணமில்லை” என்று கூறியுள்ளதாக ஏசியண்ட் நியூஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டால் தென்னிந்தியத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே நானியுடன் சாய் பல்லவி நடித்த ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ படப்பிடிப்பிலும் இதுபோல் பிரச்சினை ஏற்பட்டது. படப்பிடிப்பில் நானியும் சாய் பல்லவியும் தகராறில் ஈடுபட்டு இருவருமே படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார்கள். தற்போது நாக சௌரியாவும் சாய் பல்லவி மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் சாய் பல்லவி தற்போது தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018