மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

மருத்துவ மாணவர் உடற்கூறு ஆய்வறிக்கை!

மருத்துவ மாணவர்  உடற்கூறு ஆய்வறிக்கை!

டெல்லியில் மருத்துவம் பயின்றுவந்த மாணவர் சரத்பிரபுவின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில் சரத்பிரபுவின் உடற்கூறு ஆய்வறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமணி – தனலட்சுமி தம்பதியின் மகன் சரத்பிரபு (28). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்தார்.

பின்னர் டெல்லியில் உள்ள யூ.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டமேற்படிப்பில் (எம்.டி.) சரத்பிரபுவுக்கு மதிப்பெண்களின் அடிப்படையில் இடம் கிடைத்திருந்தது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யுசிஎம்எஸ் கல்லூரி, ஷாதரா மாவட்டத்தில் தில்ஷாத் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரியில் சரத்பிரபு எம்.டி பொது மருத்துவம் படித்துவந்தார்.

சுமார் 7 மாதங்களாக அந்தக் கல்லூரியில் படித்துவந்த சரத்பிரபு கடந்த ஜனவரி 17ஆம் தேதி அவரது அறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

பின்னர் சரத்பிரவின் பெற்றோரிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சரத்பிரபுவின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் காயம் இருக்கிறது, தங்கள் மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் தொடர்ந்து புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாணவர் சரத்பிரபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சரத்பிரபுவின் பிரேதப் பரிசோதனையை ஒன்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மேற்கொண்டனர். ஆனால் பிரேதப் பரிசோதனை அறிக்கை சரத்பிரவின் பெற்றோரிடம் கொடுக்கப்படவில்லை.

உடற்கூறு ஆய்வுக்குப் பின்னர் சரத்பிரபுவின் உடல் டெல்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சொந்த ஊரான திருப்பூர் எடுத்துச் செல்லப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.

உடற்கூறு ஆய்வறிக்கை

சரத்பிரபுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை வெளியிட அவரது பெற்றோர் வலியுறுத்திவந்தனர். பின்னர் சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கை அவரது பெற்றோரிடம் வழங்கப்பட்டது. பெற்றோரின் வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் டெல்லியில் இருக்கிறார். இவர் மூலமாக அறிக்கை சரத்பிரவின் தந்தையிடம் வழங்கப்பட்டது. இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமான மரணமாக உள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.

சரத்பிரபுக்கு பிரேதப் பரிசோதனை செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரவணன் கடந்த 2016ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

புதன் 7 பிப் 2018