மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 பிப் 2018

மாணவரைக் கத்தியால் குத்திய ஆசிரியர்!

மாணவரைக் கத்தியால் குத்திய ஆசிரியர்!

கரூரில் பள்ளி மாணவன் ஒருவனை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹசுருதீன். இவரது மகன் ஹதீகுர் ரகுமான், மணவாடியில் உள்ள ஆஷ்ரமம் மெட்ரிக் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துவருகிறார். அதே பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் ஆணைபட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட ரகுமான் பள்ளி மட்டுமின்றி சில தனியார் கிளப்புகளிலும் கிரிக்கெட் ஆடிவந்துள்ளார். இது தொடர்பாக பள்ளி உடற்கல்வி ஆசிரியரான பன்னீர்செல்வத்துக்கும் மாணவனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஆசிரியர் பன்னீர்செல்வம் சேவல் சண்டையின்போது சேவலின் காலில் கட்டப் பயன்படுத்தப்படும் கத்தியைக் கொண்டு மாணவரின் உடலில் இடுப்பு, கை, மார்பு உள்ளிட்ட நான்கு இடங்களில் குத்தியுள்ளார். மயங்கிய நிலையில் கிடந்த மாணவரை அருகில் இருந்தவர்கள் தாந்தோணிமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 7 பிப் 2018